Wednesday 15th of January 2025 08:48:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
பொலன்னறுவையில் ஆயுதங்களுடன் இருவர் கைது!

பொலன்னறுவையில் ஆயுதங்களுடன் இருவர் கைது!


ஆயுதத் தளபாடங்களுடன் பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பொலிஸ் பிரிவுற்குட்பட்ட அக்பர்புர, பங்குறாண எனுமிடத்தில் 32, 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகலவலின் அடிப்படையில் லங்காபுர பொலிஸாருடன் இணைந்து இரு வீடுகளில் சுற்றி வளைப்புத்தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதே வெள்ளிக்கிழமை குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 303 தாக்குதல் துப்பாக்கி-01, 303 மெகசீன்-01, 7.62X51 ரவைகள்-11, 7.62X39: ரவைகள்-05, வாள்கள்: 02, இரும்புச்சன்னங்கள்-190, மோட்டார் சைக்கிள் செயின்-02, சொட்கன் துவக்கு-01, அதன் தோட்டாக்கள்-05 என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், லங்காபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE